Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Cinema

ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம்

by Editor May 10, 2025
written by Editor May 10, 2025 0 comments
67

என் மௌனத்தை கலைக்கிறேன்.. ஜெயம் ரவியின் திருமண வருகைக்கு பின் ஆர்த்தியின் அறிக்கை..!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவதாக அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் ஐசரி கணேசன் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் வந்த கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது.


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக… கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன்…. இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம்.


என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான்.

இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார்.

பல மாதங்களாக அந்த குழந்தைகளின் பொறுப்பை என் தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும் அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என் கைகள் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது.


இன்று அவர் புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல் சுவர் போல அவர் கண்களுக்கு காட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள்.

அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்கு போட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்றுநான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில்நிற்கிறேன்.

இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான்தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது.

அவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம். இன்று நடந்து கொண்டிருக்கும் சட்ட விவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது.

இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை… தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்ய தவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும். இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவு மட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.


இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும்.

எங்களை உற்று பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன் விரும்பிகள் என்று அடையாளம் காட்டி கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்தி ரவி என்ற பெயரில் தான் உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும். அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம்.

அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழி வாங்கவோ பரபரப்புக்காகவோ நான்பேசவில்லை என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இருமகன்களுக்காக என்கண்ணீரை, கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக்கொண்டு போல மேலும் மேலும் உயர்ந்துஎழுகிறேன்
என ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.

AartijayamJayam Ravijayam ravi girl friend Kenishaa Francisjayam ravi wife aartiKenishaa Francisraviravi mohansinger
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்
next post
நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு