விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அன்னை ஸ்ரீ சாரதா சேவா அறக்கட்டளை பன்னிரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முதலில் வேதபாரணைத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பஜனை சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இதனை தொடர்ந்து 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையில் பெண்கள் தங்கள் கொண்டு வந்திருந்த குத்துவிளக்கை மகாலட்சுமியாக அலங்கரித்து குங்கும அர்ச்சனை, மலர் அர்ச்சனை செய்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்கள் மற்றும் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் துறவி சகோதரிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்கி சிறப்பித்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.