அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், வானூர் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி கலந்து கொண்டு 130 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார். ஒன்றிய குழுத் தலைவர் உஷா முரளி வாழ்த்திப் பேசினார்.

விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராவணன், மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும், சிறந்த இடத்தை பிடிக்க கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினார்.

ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் காந்திமதி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கணிதத்துறை தலைவர் எழிலரசி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
YouTube
Instagram
Telegram
WhatsApp
FbMessenger