தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது,
புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும். இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள்,
தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார்.