Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

குடியை நிறுத்தங்கள்

by admin February 11, 2021
written by admin February 11, 2021 0 comments
47

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார், இந்த கோரிக்கை அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது எனலாம். புதினின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

கடந்த வியாழக்கிழமை (பிப். 29) அன்று ரஷ்ய நாட்டுகளிடம், அந்நாட்டு அதிபரான புதின் உரையாற்றி உள்ளார். அந்த உரையில் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்தும் அதிகம் பேசியிருக்கிறார். குறிப்பாக, ரஷ்ய நாட்டின் அணுஉலைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், உக்ரைன் நாட்டுக்கும் ஆதரவு வழங்கும் வகையிலும் செயல்படும் NATO நாடுகளுக்கு புதின் கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.

அரசியல் விவகாரங்கள் ஒருபுறம் இருக்க, ரஷ்ய மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை சார்ந்த சில விஷயங்கள் குறித்தும் புதின் அந்த உரையில் பகிர்ந்துகொண்டார். ரஷ்யர்களின் வாழ்வு மேம்படும் என வாக்குறுதி அளித்த புதின், மக்கள் தங்கள் குடும்பங்களில் அதிக குழந்தைகளை பெற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசினார்.

குடும்பத்தின் முக்கிய நோக்கம் குழந்தைகளைப் பெறுவது, இனப்பெருக்கம் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பல இனங்களைக் கொண்ட நமது தேசத்தின் உயிரோட்டத்தை உறுதி செய்வதுதான். ஒழுக்கம் சார்ந்த விழிமியங்களும், குடும்ப கட்டமைப்பும் வேண்டுமென்றே அழிக்கப்பட்டு, சீரழிவு நிலைக்கு தள்ளப்பட்ட சில நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

மனித நாகரிகம் நிலைநிறுத்தப்படும் பாரம்பரிய விழுமியங்களின் கோட்டையாக ரஷ்யா இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் கோடிக்ககணக்கானோர் மட்டுமின்றி உலகின் பல பிரதேசங்களில் வாழும் மக்களால் நமது கலாச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குழந்தைகளை கொண்டு குடும்பங்களுக்கான ஆதரவு என்பது தார்மீக ரீதியான தேர்வு. பல குழந்தைகளை கொண்ட குடும்பம் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அரசின் முக்கிய வியூகமாகவும், அடிப்படை சமூகத் தத்துவமாகவும் அது உருமாற வேண்டும்” என்றார்.

இதுமட்டுமின்றி, பல குழந்தைகளை பெற்றுக்கொள்வோரை ஊக்குவிக்க பல புதிய திட்டங்களையும் புதின் அறிவித்தார். பல குழந்தைகளை பெறுவோருக்கு பொருளாதார ரீதியான சலுகைகளை இந்த திட்டங்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளனர். பணம் மட்டுமின்றி ஒருவர் 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்போது வரிவிலக்கையும் இரட்டிப்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விளையாட்டின் முக்கியத்துவத்தை அவர் உணர்த்தினார். ” நாட்டின் முக்கிய சாதனைகளில் ஒன்று நமது விளையாட்டு. அடுத்த ஆண்டு தொடக்கத்தில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நிலையான உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரி விலக்குகளை அரசு வழங்கும்” என்று அதிபர் புதின் அறிவித்தார். இவை மட்டுமின்றி, மது குடிக்கும் பழக்கத்தையும் குறைந்துக்கொள்ளும்படி அதிபர் புதின் கோரிக்கை வைத்தார். அதாவது உடல்நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும்படி அவர் கோரினார்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
பைக் மீது கார் மோதல் மருத்துவர் பலி.
next post
சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு முகாம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு