67
பைக் மீது கார் மோதல் மருத்துவர் பலி.
திருவண்ணாமலை, சகாயா நகரை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி சித்ரா, 43; யோகா மற்றும் இயற்கை மருத்துவர். நல்லாண்பிள்ளைபெற்றாள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 ஆண்டுகளாக மத்திய அரசின் சுகாதார மேம்பட்டு திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று காலை 9 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து கடலாடிகுளம் கூட்ரோட்டிற்கு பஸ்சில் வந்தவர்.
அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புத்தகரம் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த சித்ராவுக்கு 12 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.