51
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26ம்தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொது செலவினம் , கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் தொழிலாளர் வரவு செலவு திட்டப்பணிகள், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல், தொகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் கிராம சபையில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.