Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடல் தகனம்

by Editor April 8, 2024
written by Editor April 8, 2024 0 comments
35

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான புகழேந்தி (70) கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 5-ம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 10.30க்கு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலிக்காக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டது.

புகழேந்தியின் உடலுக்கு இரவு 9.30 மணிக்கு கலைஞர் அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்ஆர் கே. பன்னீர்செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ கணேசன் உள்ளிட்டோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவனும் புகழேந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான அத்தியூர் திருவாதி  கொண்டு செல்லப்பட்டது. நேற்று  காலை அமைச்சர் துரைமுருகன், எம்பிகள் ஜெகத்ரட்சகன், கவுதமசிகாமணி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்பி,  பாஜக மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜி. சம்பத், விழுப்புரம் மக்களவைத்தொகுதி வேட்பாளர்கள் ரவிகுமார், முரளி சங்கர், களஞ்சியம், லட்சுமணன் எம் எல் ஏ, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புகழேந்தியின் இறுதி ஊர்வலம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அத்தியூர் திருவாதி கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் அவரது உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பின்னர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. புகழேந்தி எம்எல்ஏவின் உடலுக்கு அவரின் மகன் செல்வகுமார் மூலம் தீ வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியப் பெண்.
next post
10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வரலாறு

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு