Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

கல்லூரியில் மகளிர் தின விழா

by admin March 24, 2024
written by admin March 24, 2024 0 comments
46

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் கவின் கலை மன்றம் சார்பில் மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் மா. வீரமுத்து தலைமையேற்றார். கவின் கலைமன்ற பொறுப்பாசிரியர் கீதா வரவேற்றார். சரசுவதி கல்விக்கோயிலின் முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார் அவர்கள் இவ்விழாவில் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக அலுவலர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கடலூர் மாவட்டம், புள்ளியியல் துறை உதவி இயக்குநர் கனகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமியில் முதலில் தொழில் செய்தவர்கள் பெண்கள்தான், பூமியில் மிகபெரிய ஆக்கசக்தியே பெண்கள்தான் என்று சிறப்புரையாற்றினார், திண்டிவனம், வழக்கறிஞர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்களுக்கு அழகு அடையாளமல்ல அறிவுதான் அடையாளம் என்று சிறப்புரையாற்றினார்.

கோனேரிக்குப்பம், அரசு பள்ளி மாணவிகள், திருக்குறளில் இரட்டை உலக சாதனை படைத்த மாணவிகளான செல்வி.சாதனா, செல்வி.சத்யா ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களின் சாதனைகள் பற்றியும் திருகுறளின் சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர். பெண்களின் பெருமை குறித்து மாணவர்கள் கவிதை வாசித்தனர்.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் தா விஜயலட்சுமி அவர்கள் மங்கையராய் பிறப்பதற்கே என்னும் தலைப்பில் கவிதை வாசித்தார். மகளிரின் மாண்பு குறித்து தமிழ் துறை மாணவி உரையாற்றினார். சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது இவ்விழாவின் நிறைவாக கவின் கலை மன்றம் உதவி பொறுப்பாசிரியர் பேராசிரியர் தா மஞ்சனி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’
next post
போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியப் பெண்.

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு