திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் திருச்சி புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் அருட் சகோதரர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சரக காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிசாமி மற்றும் தாளாளர் அருள் சகோதரர் ஜெயராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பிரான்சிஸ்கன் குழுமத்தின் ஐந்து பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். 
இவ்வைந்து பள்ளியின் மாணவ-மாணவிகள் விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். இதில் சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி மாணவ-மாணவிகள் கைப்பந்து, வீசுப்பந்து, கோகோ மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் முதலிடமும், அதனை தொடர்ந்து ஆங்கில பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா, குழு நடனம் மற்றும் கூடைப்பந்து போன்ற போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
அதிக பரிசுகளை வென்ற சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு ஒட்டுமொத்த சுழல் கோப்பை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.