முதியவரிடம் மொபைல் பறித்த வாலிபர் கைது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவில் பங்குனி உத்திர விழாவில் முதியவரிடம் செல்போன் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவர் நேற்று மயிலம் கோவிலுக்கு பங்குனி உத்திர விழாவிற்கு வந்திருந்தார். அங்கு மலை அடிவாரத்தில் மதியம் 2-00 மணிக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்தனர். இவற்றை பெறுவதற்காக முதியவர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கிடங்கல் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் 24; என்பவர் தனக்கு முன்னால் நின்றிருந்த முதியவரின் மொபைல் போனை பறித்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் மேலும் இரண்டு மொபைல்போன்கள் வைத்திருந்தார். இவற்றை மயிலம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜேஷ்யை கைது செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.